நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில் குடமுழுக்கு விழாவில் பெண்ணிடம் தங்கசங்கிலி பறிப்பு

குடமுழுக்கு நிகழ்ச்சியின் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் மூதாட்டியிடம் 3 பவுன் சங்கிலியை பறித்துள்ளனர்

Update: 2022-05-20 12:30 GMT

நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில் குடமுழுக்கு விழா

நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்ற  மூதாட்டியிடம்  தங்கச்சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச்சென்ற சம்பவம்  குறித்து  போலீஸார் விசாரிக்கின்றனர்..

சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்தவர் வயதான மூதாட்டி அம்பிகா(73), இவர் இன்று நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில் மகா கும்பாபிஷேக நிகழ்விற்கு  வந்திருந்தார்.குடமுழுக்கு நிகழ்ச்சியை காண ஏராளமான மக்கள் குவிந்தனர். இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் மூதாட்டி அம்பிகா கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் தங்க சங்கிலியை பறித்துள்ளனர்.குடமுழுக்கு முடிந்தவுடன் மூதாட்டி கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலி மாயமாகியிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்து, ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ஆதம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Tags:    

Similar News