ஆசிய அளவிலான கிக் பாக்ஸிங் போட்டி: தங்கம் வென்று சாதித்த கல்லூரி மாணவி
தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய அளவிலான கிக் பாக்ஸிங் போட்டியில் காஞ்சிபுரம் நெசவாளர் மகளும், கல்லூரி மாணவி நீனா தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
காஞ்சிபுரம் புறநகர் பகுதியான புத்தேரி கிராம ஊராட்சியில் மேட்டுத்தெரு பகுதியில் வசிப்பவர் நெசவாளர் நீலகண்டன். இவரது மனைவி மலர்கொடியும் நெசவாளியான நிலையில் காஞ்சிபுரம் தனியார் நெசவாளர் மையத்தில் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்களுக்கு முதுகலை பட்டம் பயிலும் கீர்த்திநாதன் என்ற மகனும், நீனா எனும் மாலை நேர கல்லூரியில் இளங்கலை தமிழ் பட்டபடிப்பு பயிலும் மகளும் உள்ளனர். இவர்களது கல்வி கற்க நாள்தோறும் சுமார் 10 கிலோமீட்டர் தூரம் வந்து செல்கின்றனர்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள நீலகண்டன் தனது வீட்டில் சிறு மளிகை கடையும் வைத்து தனது மகன், மகளை சிறந்த கல்வியாளராக ஆக்க முயன்று வருகிறார்.
இந்நிலையில், இவரது மகள் மீனா கடந்த நான்கு வருடங்களாக காஞ்சிபுரம் பெருமாள் கோயில் அருகே உள்ள தனியார் கிக் பாக்ஸிங் பயிற்சி மையத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
காலை நேரங்களில் வீட்டில் உள்ள மளிகை கடையில் வியாபாரம், கால்நடை பாரமரிப்பு , மதிய நேரம் கல்லூரி , மாலை நேரம் கிக் பாக்ஸிங் பயிற்சி என தொடர்ச்சியாக தனது நேரத்தை ஒதுக்கி கடுமையான முயற்சியில் கல்வி, விளையாட்டு என சாதனை மங்கையாக மாறியுள்ளார்.
முதலில் மாவட்ட, மண்டல, மாநில அளவில் நடைபெறும் போட்டிகளிலும் அவ்வப்போது கடும் பொருளாதார நெருக்கடியிலும் அவரது பெற்றோரின் ஊக்கத்தால் பல போட்டிகளில் தங்கம் வெள்ளி வெண்கலம் என வாரிக்குவித்து தனது வீட்டில் உள்ள மளிகை கடை பொருட்களுக்கு இடையே பதக்கங்களை போட்டு வைத்திருப்பது பார்க்கும் அனைவரையும் ஒரு கணம் நெகிழ்ச்சி அடைய வைக்கிறது.
இந்நிலையில், தாய்லாந்தில் இந்த மாதம் நடந்த 'ஆசிய கிக் பாக்சிங் சாம் பியன்ஷிப் போட்டியில், இந்திய அணியில் பங்கேற்ற தமிழக வீரர், வீராங்கனையர் ஒரு தங்கம் உட்பட மூன்று பதக்கங்களை வென்று அசத்தினர்.
'வாக்கோ' கிக் பாக் சிங் சார்பில், ஆசிய அளவிலான கிக் பாக்சிங் சாம் பியன்ஷிப் போட்டி, தாய்லாந்து, பாங்காக் பகுதியில், கடந்த 10ம் தேதி துவங்கி 18ம் தேதி நிறைவடைந்தது.
இதில், இந்தியா உட் பட 20 நாடுகளைசேர்ந்த 500க்கும் மேற்பட்ட வீரர்கள் பல பிரிவுகளில் போட்டியிட வந்திருந்தனர்.
குறிப்பாக தமிழ்நாடு மாநில அமெச்சூர் கிக் பாக்சிங் சங்கம் சார்பில் , காஞ்சி புரத்தைச் சேர்ந்த, நீனா 50 கிலோ எடை பிரிவிலும், வேலுார் சரத்ராஜ் 75 கிலோ பிரிவிலும் இந்தியா சார்பில் பங்கேற்றனர்.
நீனா கிரியேட்டிவ் பார்ம்ஸ்' என்ற பிரிவில், 'வெப்பன்' என்ற ஆயுத வகையாக தனிநபர் போட்டியில் பங்கேற்று, காஞ்சி கல்லூரி மாணவி தங்கம் வென்று அசத்தினார்.
இந்த வெற்றியால், ஆசிய அளவிலான கிக் பாக்ஸிங் போட்டியில் முதல் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை என்ற பெயரும் பெற்று நீனா சாதனை படைத்துள்ளார். அதேபோல் மற்றொரு போட்டிகளிலும், நீனா வெண்கலப் பதக்கத்தையும் வென்றார். இவருடன் சென்ற தமிழக வீரர் சரத்ராஜ் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
இவர்களுடன் சேர்ந்து இந்திய அணியினர், நீனா வென்ற ஒரு தங்கம், மூன்று வெள்ளி, 21 வெண்கலம் உட்பட மொத்தம் 25 பதக்கங்களை வென்று அசத்தினர். பதக்கம் வென்ற இருவரும் நேற்று நாடு திரும்பினர்.
இதில் கலந்து கொண்ட நீனா கூறுகையில் , தமிழகத்தில் பல துறைகளில் சாதிக்க தற்போது அதிக இளம்பெண்கள் வந்துவிட்டனர். என்னை பொருத்த வரையில் எனக்கு சிறந்த முறையில் , வெற்றி வாய்ப்பு பெரும் வகையில் திட்டங்களையும் , அதற்கான பயிற்சிகளையும் காஞ்சிபுரத்தில் உள்ள ஓன்மேன் மார்ஷியல் அகாடமியில் கடந்த நான்கு வருடங்களாக தனக்கு அளித்து ஆசியாளவில் வெற்றி பெற வைத்தனர்.
காஞ்சிபுரத்தில் உள்ள அறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கு பல கோடி ரூபாய் மதிப்பில் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் கோரிக்கையில் புதுப்பிக்கப்பட்ட நிலையில், தங்களுக்கும் பயிற்சி மையத்தை அங்கு ஏற்படுத்தி அளித்தால் என் போன்ற ஏழை இளம் பெண்கள் திறமையாக பயிற்சி மேற்கொண்டு பல தங்க பதக்கங்களை இந்தியாவிற்கும் கொண்டு வருவார்கள் என தெரிவித்து, தமிழக இளைஞர் நலன் மட்டும் மேம்பாட்டு துறை அமைச்சராக பதவி ஏற்றுள்ள உதயநிதி ஸ்டாலின், ஏழை விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தியும், தேவையான பயிற்சி மையங்களை ஏற்படுத்தல் வேண்டும் என கோரிக்கை வைப்பதாக தெரிவித்தார்.
பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள காஞ்சிபுரம் கல்லூரி மாணவி விளையாட்டு திறனை ஆசிய அளவில் தங்கம் வென்று நிரூபித்தது போல், விரைவில் ஒலிம்பிக் போட்டியிடும் பங்கேற்கும் அளவிற்கு கடுமையாக உழைக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.