காஞ்சிபுரம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : 156 பதவிகளுக்கு 778 பேர் போட்டி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 210 பேர் வேட்புமனு வாபஸ் பெற்றனர். 156 பதவிகளுக்கு 778 பேர் போட்டி

Update: 2022-02-07 15:15 GMT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த வாரம் துவங்கி 1001  பேர்  வேட்புமனுவை தாக்கல் செய்தனர். தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை இரு தினங்களுக்கு முன் பரிசீலனை செய்யப்பட்ட 2 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 999 மனுக்கள் ஏற்றுக் கொள்ளபட்டது.

திங்கட்கிழமையான இன்று மாலை 3 மணிக்குள் வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுவை வாபஸ் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் 210 மனுக்கள் காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் வாபஸ் பெறப்பட்டது.

இறுதி கட்ட நிலவரப்படி : 

காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 51 பதவிகளுக்கு 314 நபர்களும்,

குன்றத்தூர் நகராட்சி 30 பதவிகளுக்கு 122  நபர்களும், 

மாங்காடு பேரூராட்சி இருபத்தி ஏழு பதவிகளுக்கு 129 நபர்களும் , 

வாலாஜாபாத் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளுக்கு 58 நபர்களும் , 

உத்திரமேரூர் பேரூராட்சியில் 18 வார்டுகளுக்கு 74 நபர்களும் , 

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள 15 வார்டுகளுக்கு  81 நபர்களும் போட்டியிடுகின்றனர்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 156 பதவிகளுக்கு 778 பேர் தற்போது களத்தில் போட்டியிடுகின்றனர்.

Tags:    

Similar News