நகர்புற உள்ளாட்சி தேர்தல் : இன்று 436 நபர்கள் வேட்புமனு தாக்கல்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் 156 பதவிகளுக்கு 550 நபர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 19ம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில் போட்டியிடும் நபர்களிடமிருந்து கடந்த வெள்ளிக்கிழமை முதல் வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.
நேற்றுவரை 114 பேர் காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் வேட்பு மனுக்களை அளித்துள்ளனர்.
இன்று காலை 10 மணி முதல் திமுக, விசிக, காங்கிரஸ், சுயேச்சைகள் உள்ளிட்ட பிற கட்சிகள் என மொத்தம் 436 பேர் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் 147, குன்றத்தூர் நகராட்சியில் 96,மாங்காடு நகராட்சியில் 58, உத்திரமேரூர் பேரூராட்சியில் 28, வாலாஜாபாத் பேரூராட்சியில் 57 மற்றும் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிகளில் 50 என மொத்தம் 436 பேர் இன்று மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
இதுவரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 550 பேர் போட்டியிட வேட்பு மனுகளை தாக்கல் செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 வார்டுகளில் உள்ள திமுக, விசிக, சுயேட்சை உள்ளிட்ட வேட்பாளர்கள் ஆர்வத்துடன் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இதுவரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் 156 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பதவிகளுக்கு 550 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.