காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11 மணி நிலவரப்படி 26.56 சதவீத வாக்குகள் பதிவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப் பதிவில் 11 மணி நிலவரப்படி 6.56 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது

Update: 2022-02-19 06:15 GMT

காஞ்சிபுரத்தில் வாக்குப்பதிவு செய்து விட்டு வரும் தம்பதியினர்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி 3 பேரூராட்சிகள் 2 நகராட்சிகள் ஆகியவற்றுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணியளவில் துவங்கியது.

மாவட்டம் முழுவதும் காலை 7 மணி முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்கு சாவடிக்கு வந்து தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். குறிப்பாக ஆண்களைவிட பெண்கள் அதிக அளவில் ஆர்வம் கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11 மணி நிலவரப்படி 26.56 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் 25.47% ,

குன்றத்தூர் நகராட்சியில் 29.36 சதவீதம்,

மாங்காடு நகராட்சியில் 29.92சதவீதமும்,

வாலாஜாபாத் பேரூராட்சியில் 30.21சதவீதமும்,

உத்திரமேரூர் பேரூராட்சியில் 29.51சதவீதமும்,

ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் 20.65 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது.

Tags:    

Similar News