Kamarajar tamil quotes-ஊருக்கு உழைத்த உத்தம தலைவர், காமராஜர்..! பொன்மொழி படியுங்கள்..!
காமராஜர் கடைசி வரை தனக்கென ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ளாதவர். நாட்டுக்கென்றே உழைத்து உயர்ந்தவர்.
Kamarajar tamil quotes
காமராஜர் , ஜூலை 15, 1903ல் விருதுநகரில் பிறந்தார். தந்தை குமாரசாமி, தாயார் சிவகாமி அம்மையார். இவர் சுதந்திர ஆர்வலர் ஆவார். இந்திய அரசியலில் தவிர்க்கமுடியாத தலைவர். தான் கல்வி கற்க முடியாமல் போனதுபோல வேறு எந்த குழந்தையும் இருந்து விடக்கூடாது என்பதால் முதல் அமைச்சர் ஆனதும் பல கல்வித்திட்டங்களை கொண்டு வந்தார். நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடும் பல உன்னத திட்டங்கள் காமராஜர் ஆட்சியில்தான் கொடுவரப்பட்டது.
அவரது எளிமை பலரையும் ஆச்சரியப்படுத்தும். அதிகாரத்தில் இருந்தபோது கூட வறுமையான தனது குடும்பத்துக்கு எதையும் செய்யாதவர். ஒரு உண்மையான தலைவர் என்றால் அது காமராஜராகத்தான் இருக்கமுடியும்.
படிக்காத மேதை என்று போற்றப்பட்ட அந்த மாமனிதரின் பொன்மொழிகளை பார்ப்போம் வாங்க.
Kamarajar tamil quotes
ஒரு பெண்ணிற்கு கல்வி புகட்டுவது ஒரு குடும்பத்திற்கே கல்வி தருவது போலாகும்..!
எந்த அதிகாரத்தில் இருந்தாலும் சரி பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். பொறுப்புணர்வு இல்லாத அதிகாரம் நிலைக்காது..!
நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு உழைக்காத மனிதன் பிணத்திற்கு சமமானவன் ஆவான்..!
அளவுக்கு அதிகமாக பேசுவது எவ்வளவு தீமையான வழக்கமாக இருக்கிறதோ, அதே போல் குறைவாக பேசுவதும் தீமையைத் தான் தரும்.
Kamarajar tamil quotes
பிறர் உழைப்பை தன் சுயநலத்திற்காக பயன்படுத்துவதே உலகின் மிகவும் கேவலமான செயல்களில் ஒன்றாகும்.
எல்லோருடைய வாழ்க்கையும் வரலாறு ஆவதில்லை. வரலாறு ஆனவர்கள் யாரும் தனக்காக வாழ்ந்ததில்லை.
அனைத்து மக்களிடமும் குறைகள் மட்டுமே இருப்பதில்லை. ஏதேனும் சிறப்புத் திறமைகளும் இருக்கத்தான் செய்யும்...!
நேரம் தவறாமை எனும் கருவியை பயன்படுத்துபவன் எப்போதும் கதாநாயகன் தான்...!
Kamarajar tamil quotes
உன் பிள்ளை முடமாகப் பிறந்து இருந்தால்.. சொத்து சேமித்து வை. சொத்து சேர்த்து வைத்து பிள்ளையை முடம் ஆக்காதே.
எல்லாம் போய்விட்டாலும் வெல்ல முடியாத உள்ளம் இருந்தால் உலகத்தையே கைப்பற்றலாம்.
பணம் இருந்தால் தான் நாலு பேர் நம்மை மதிப்பார்கள் என்றால், அந்த மானங்கெட்ட மதிப்பு எனக்குத் தேவையே இல்லை..!
சட்டமும் விதிமுறைகளும் மக்களுக்காவே உருவாக்கப்பட்டவை. சட்டத்துக்காகவும் விதி முறைகளுக்காகவும் மக்கள் இல்லை...!
Kamarajar tamil quotes
சமதர்ம சமுதாயம் மலர வன்முறை தேவையில்லை. கல்வியும் உழைப்பும் மட்டுமே போதுமானது.!
நாடு உயர்ந்தால் நாமும் உயர்வோம்..!
நூறு சிறந்த அறிவாளிகளுடன் போட்டி போடுவதை விட, ஒரு முட்டாளோடு போட்டி போடுவது மிக கடினமானது..!
அப்பாவி ஏழை மக்களை வசதி கொண்டவர்களும் கல்மனம் கொண்டவர்களும் கசக்கி பிழிந்து விடாதபடி தடுக்க வேண்டியது மிக அவசியம்.
தாய்மார் கற்று விட்டால் நாட்டில் தொந்தரவே இருக்காது.
Kamarajar tamil quotes
அரசு என்பது எல்லா மக்களுக்குமே சொந்தமானது.
கற்ற ஜாதி, கற்காத ஜாதி என்றொரு ஜாதி உண்டாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
மாணவர்கள் அரசியலில் ஈடுபட வேண்டியதில்லை. அரசியல் தான் நாட்டுக்கு அஸ்திவாரம்.
அரசியல் பற்றி மாணவர்கள் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். அரசியலைப் பற்றி சிந்திக்காமல் இருப்பது ஆபத்தானது.
ஜாதி என்ற நோயை முளையிலேயே கிள்ளி ஏறிய வேண்டும்.
Kamarajar tamil quotes
நாடு வளர்ச்சி அடைய வறுமையும் அறியாமையும் அழிய வேண்டும். இவை இரண்டும் அழியாமல் நாடு வளர்ச்சி அடைந்து விட்டதாக கூற முடியாது.
நாட்டின் ஐக்கியத்தை பாதுகாப்பதிலும் ஒற்றுமையோடு பாடுபடுவதிலும் தான் நமது முன்னேற்றம் இருக்கிறது.
இலட்சியத்தை அடைய அமைதியான வழிகளைப் பின்பற்ற வேண்டும். பலாத்கார புரட்சி தேவையில்லை.
நாம் எதைச் செய்தாலும் எதற்காக செய்கிறோம் என்பதை மக்களுக்குச் சொல்ல வேண்டும்.
ஒன்றை செய்ய விரும்பும் போது அதை செய்வதற்காகவே இருக்கிறோம் என எண்ண வேண்டும்.
Kamarajar tamil quotes
துன்பத்தை அனுபவிக்காமல் எந்த ஒரு மனிதனும் அவரது இலட்சியத்தை அடைய முடியாது.
கலப்பு மணம், சமபந்தி உணவு இவைகளால் மட்டுமே சாதி அழிந்துவிடாது. மனிதனின் மனம் புரட்சிகரமான மாறுதலைப் பெற்றால்தான் சாதி ஒழியும்.