கல்விக் கண் திறந்த காமராசரே..! தலைவர்களில் நீ இமயமானாய்..!
Kamarajar Tamil Quotes-கற்றிருந்தால் உலகத்தலைவன் ஆகிவிடுவாய் என்றுதான் பாரதத் தாய் உன்னை படிக்கவைக்காமல் படைத்துவிட்டாளோ..? இந்தியத் திருமகனாய் மக்கள் மனதில் வாழ்ந்து மறைந்தாய்.
Kamarajar Tamil Quotes
தன்னலம் சிறிதும் இன்றி மக்கள் பணியே மகத்தான பணி என்று பொற்கால ஆட்சி தந்து, பொதுநலத்துடன் செயல்பட்ட ஒப்பற்ற ஒரே தலைவன் காமராசர். கல்விக் கண் திறந்த கர்மவீரர், படிக்காத மேதை, பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பொன்மொழிகள் வாசகர்களுக்காக தரப்பட்டுள்ளன.
- ஒருமுறை தான் ஆட்சிக்கு வந்தாய்..! ஆனால் பல ஆட்சிகள் பேசும் அளவிற்கு நல்லது செய்தாய்..!
- எளிமைக்கு நீ ஒரு எடுத்துக்காட்டு..! நம் தமிழ்நாட்டு மக்கள் தான் உன் உயிர் காற்றும்..!
- உழைப்பால் உயர்ந்த வல்லர் இவரே..! ஊருக்கு உழைத்த உத்தமர் இவரே..! நாட்டிற்காக வாழ்ந்த நல்லவர் இவரே..!
- தன்னை மறந்து பிறரை நினைத்து தன் வீட்டையும் மறந்து நாட்டுக்காக வாழ்ந்தவர்..!
- பல அணைகள் கட்டி நீரைத் தேக்கியவர்..! அந்நீரைக் கொண்டு விவசாயம் காத்தவர்..! விவசாயம் செழிக்க மின்சாரமும் கொடுத்தவர்..!
Kamarajar Tamil Quotes
- பயிர்கள் விளைந்தால் உயிர்கள் வாழும் என்பதால் பசுமை செழிக்க, பல திட்டங்கள் செய்தவர்..!
- விவசாயத்திற்கு வித்திட்ட இவர் பெயர் நிலைத்து நிற்கும் தமிழகம் வாழும் வரை..!
- ஆற்றினிலே இமயமலை! அன்பினிலே மேருமலை..! எத்தனையோ ஆட்கள் உண்டு ஆனாலும் இவரை போல யாருண்டு..?
- தனக்கென வாழாத பெருந்தலைவர் என்றானார்… தர்மத்தின் தலைவனாக, தரணியிலே வாழ்ந்துயர்ந்து நின்றார்..!
- இவர் வாழ்ந்த காலமே காவியமாய்..! இவர் வாழ்ந்த வருடங்கள் பொற்காலமாய்..!
- பல பேரறிவு கொண்ட மாணவர்கள் மனதில் நம்பிக்கை நாயகனாய் இவர் முகம் மட்டுமே..!
Kamarajar Tamil Quotes
- அருந்தலைவர் இவர்..! பெருந்தலைவர் இவர்..! பொதுநலத் தொண்டில், முழுவதுமாய் நின்றவர் இவர்..!
- பொருள் தேடலில் இவர் இறங்கவில்லை, செல்வ வளத்தை இவர் சேர்க்கவில்லை.. அதனால் தானோ இவர் இன்றளவும் போற்றப்படுகிறார்..!
- பகட்டான வாழ்க்கையை மறக்க வைத்தவர் இவரே..! பண்பாக வாழ்ந்து காட்டி பல இதயங்களை தொட்டவரும் இவரே..!
- அழகு தமிழிலே இவரது பேச்சு.. சமத்துவம் என்பதே இவரது மூச்சு..!
- மனிதாபிமானம் கொண்ட தென்னாட்டு காந்தி இவர்..! கதராடை அணிந்த கல்வியின் தந்தை இவர்..!
- தர்ம வீரரும் இவரே..! கர்ம வீரரும் இவரே..! தமிழகத்தில் சுதந்திர தியாகிகளில் இவரும் ஒருவரே..!
- எல்லோருடைய வாழ்க்கையும் வரலாறு ஆவதில்லை. வரலாறாய் ஆனவர்கள் தனக்காக வாழ்ந்ததில்லை..
- ஒரு பெண்ணிற்கு கல்வி புகட்டுவது ஒரு குடும்பத்திற்கே கல்வி தருவதாகும்..!
- நேரம் தவறாமை எனும் கருவியை பயன்படுத்துபவன் எப்போதும் கதாநாயகன் தான்..!
- .உன் பிள்ளை முடமாக பிறந்து இருந்தால்..சொத்து சேர்த்து வை..சொத்து சேர்த்து வைத்து பிள்ளையை முடம் ஆக்காதே..!
- சட்டமும் விதிமுறைகளும் மக்களுக்காவே உருவாக்கப்பட்டவை..சட்டத்துக்காகவும் விதி முறைகளுக்காகவும்
மக்கள் இல்லை..!
- சமதர்ம சமுதாயம் மலர..வன்முறை தேவையில்லை. கல்வியும் உழைப்பும் போதுமானது..!
- நூறு சிறந்த அறிவாளிகளுடன் போட்டி போடுவதை விட..ஒரு முட்டாளோடு போட்டி போடுவது
மிக கடினமானது..!
Kamarajar Tamil Quotes
- அப்பாவி ஏழை மக்களை வசதி கொண்டவர்களும்..கல்மனம் கொண்டவர்களும்..கசக்கி பிழிந்து விடாதபடி
தடுக்க வேண்டியது மிக அவசியம்..!
- கற்ற ஜாதி, கற்காத ஜாதி என்றொரு ஜாதி உண்டாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்..!
- அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2