கள்ளழகர் வரப்போறாரு, 2 ஆண்டுக்கு பிறகு வைகை ஆற்றில் எழுந்தருள போறாரு
மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வரப்போறாரு, 2 ஆண்டுக்கு பிறகு வைகை ஆற்றில் எழுந்தருளல் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.;
மதுரையில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. மீனாட்சி பட்டாபிஷேகம், மீனாட்சி திருக்கல்யாணம் அதனை தொடர்ந்து வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்குதல் போன்ற நிகழ்ச்சிகளில் லட்சக்கணக்கான மக்கள் கூடுவது வழக்கம்.
மதுரை மண்ணின் அடையாளமான இந்த பாரம்பரிய திருவிழா கொரோனா பெருந்தொற்று அதன் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவுகள். கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டும் நடைபெறவில்லை.
இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் கட்டுப்பாடுகளில் உள்ள தளர்வுகள் காரணமாக இந்த ஆண்டு சித்திரை திருவிழா நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 2 ஆண்டுகளுக்கு பின்னர் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்க உள்ள செய்தி மதுரை மாவட்ட மக்களுக்கு மட்டும் இன்றி ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் மகிழ்ச்சியான ஒரு செய்தியாக அமைந்துள்ளது.
இதுபற்றிய நிகழ்ச்சி நிரல் வருமாறு:-
மதுரை சித்திரை திருவிழா 2022 ஏப்ரல் 05, 2022 – செவ்வாய்க்கிழமை – சித்திரை திருவிழா கொடியேற்றம் – கற்பக விருக்ஷ,சிம்ம வாகனத்தில் எழுந்தருளல். ஏப்ரல் 06 – புதன்கிழமை – பூத , அன்ன வாகனம்,ஏப்ரல் 07- வியாழக்கிழமை – கைலாச பர்வதம், காமதேனு வாகனம்,ஏப்ரல் 08 – வெள்ளிக்கிழமை – தங்க பல்லக்கு,ஏப்ரல் 09– சனிக்கிழமை – வேடர் பறி லீலை – தங்க குதிரை வாகனம்,ஏப்ரல் 10– ஞாயிற்றுக்கிழமை – சைவ சமய ஸ்தாபித்த வரலாற்று லீலை – ரிஷப வாகனம்,ஏப்ரல் 11– திங்கட்கிழமை- நந்தீகேஸ்வரர் , யாளி வாகனம்,ஏப்ரல் 12– செவ்வாய்க்கிழமை – ஸ்ரீ மீனாட்சி பட்டாபிஷேகம் – வெள்ளி சிம்மாசன உலா,ஏப்ரல் 13– புதன்கிழமை – ஸ்ரீ மீனாட்சி திக்விஜயம் – இந்திர விமான உலா,ஏப்ரல் 14 வியாழக்கிழமை – ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் யானை வாகனம் , புஷ்பபல்லக்கு,
ஏப்ரல் 15– வெள்ளிக்கிழமை – திருத்தேர் – தேரோட்டம் (ரத உற்சவம்) – சப்தாவர்ண சப்பரம்,ஏப்ரல் 15– வெள்ளிக்கிழமை – தீர்த்தம் வெள்ளி விருச்சபை சேவை, அன்று இரவு தல்லாகுளத்தில் எதிர் சேவை,ஏப்ரல் 16 சனிக்கிழமை – ஸ்ரீ கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் – 1000 பொன்சம்பரத்துடன் – சைத்யோபசாரம் வண்டியூர் (இரவு),ஏப்ரல் 17– ஞாயிறுக்கிழமை – திருமாலிருந்தசோலை ஸ்ரீ கள்ளழகர் – வண்டியூர் தேனுர் மண்டபம் – சேஷ வாகனம் (காலை) – கருட வாகனம் , பிற்பகல் – மண்டூக மகரிஷி மோட்சம் தருதல், (இரவு) தசாவதார காட்சி இடம் : ராமராயர் மண்டபம்,ஏப்ரல் 18– திங்கள்கிழமை- (காலை) மோகனாவதாரம் – (இரவு) கள்ளழகர் திருக்கோலம் புஷ்ப பல்லக்கு – மைசூர் மண்டபம்.ஏப்ரல் 19– செவ்வாய்க்கிழமை – ஸ்ரீ கள்ளழகர் திருமலை எழுந்தருளல்.