உளுந்தூர்பேட்டை அருகே மணல் கடத்திய டிராக்டர் மற்றும் ஜேசிபி பறிமுதல்
உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர்கோட்டையில் மணல் கடத்த பயன்படுத்திய டிராக்டர்கள் மற்றும் ஜேசிபி பறிமுதல் செய்யப்பட்டது
கள்ளகுறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர்கோட்டையில் மணல் கடத்தப்படுவதாக டிஎஸ்பி மணிமொழியனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது குறித்து சோதனை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
அதன்பேரில் போலீசார் சோதனை மேற்கொண்டபோது மணல் கடத்த பயன்படுத்திய 4 டிராக்டர் ஒரு ஜேசிபி மற்றும் 4 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்