தடுப்பு முன்னெச்சரிக்கை பின்பற்றாத கடைகளுக்கு அபராதம்

கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றாத கடைகளுக்கு போலீவ்சார் அபராதம் விதித்தனர்.

Update: 2022-01-11 16:15 GMT

அபராதம் விதிக்கும் போலீசார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் நெடுஞ்செழியன் தலைமையில் காவலர்கள் துணிக்கடை,மருந்து கடை,நகை கடை,வணிக வளாகங்கள் போன்ற இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது பல கடைகளில்  முக கவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளர்களை அனுமதித்து இருப்பது தெரிய வந்தது. கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை அறிவிக்கப்பட்டிருந்தும் அதை பின்பற்றாத கடைகளுக்கு  அபராதம் விதித்தனர்.

Tags:    

Similar News