உளுந்தூர்பேட்டை அருகே உரிய ஆவணம் இன்றி வைத்திருந்த ரொக்க பணம் பறிமுதல்
உளுந்தூர்பேட்டை அருகே உரிய ஆவணம் இன்றி வைத்திருந்த ரொக்க பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது உரிய ஆவணம் இன்றி வைத்திருந்த இரண்டு லட்சத்து 20 ஆயிரம் ரொக்க பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றிய தேர்தல் நடத்தும் அலுவலர் சீனிவாசனிடம் ஒப்படைக்கப்பட்டன.