ஊரக உள்ளாட்சி தேர்தல்: உளுந்தூர்பேட்டை ஒன்றியம் 16வது வார்டில் 7 முனை போட்டி
ஊரக உள்ளாட்சி தேர்தலில் உளுந்தூர்பேட்டை ஒன்றியம் 16வது வார்டில் 7 முனை போட்டி நிலவி வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 6ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.
இதில் 16வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு உமாராணி - திராவிட முன்னேற்றக் கழகம், கலைச்செல்வி- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், தேவி - பாரதிய ஜனதா கட்சி, செல்வராணி- பாட்டாளி மக்கள் கட்சி, ரம்யா, தேவி, கவிதா - சுயேட்சை ஆகிய 7 பேர் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் 7 வேட்பாளர்களும் கிராமம் கிராமாக தங்களுக்கான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்குப்பதிவுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் தற்போது பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.