பள்ளி கட்டிடத்தில் ஓடுகள் விழும் அபாயம்: சீர் செய்ய பொதுமக்கள் கோரிக்கை
பள்ளிக் கட்டிடத்தில் ஓடுகள் விழும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், சீர் செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை டேனிஷ் மிஷன் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் வளாக கட்டிடத்தில் உள்ள ஓடுகள் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் அபாயம் உள்ளது.
இதனால் மாணவர்களின் பெற்றோர்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். எனவே பள்ளி நிர்வாகம் அதனை கண்டறிந்து சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் சார்பாக வேண்டுகோள் வைத்துள்ளனர்.