உளுந்தூர்பேட்டை அருகே நடமாடும் காய்கறி வாகனங்களை அரசு அலுவலர்கள் தொடங்கி வைத்தனர்

உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்நடமாடும் காய்கறி வாகனங்களை அரசு அலுவலர்கள் தொடங்கி வைத்தனர்;

Update: 2021-05-24 17:00 GMT

திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடமாடும் வாகனங்களை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்ணன் மற்றும் செந்தில்முருகன் ஆகியோர் துவங்கி வைத்தார்கள்

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை அடுத்து பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடமாடும் வாகனங்களில் காய்கறி, பழங்கள் ஆகியவற்றை விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது, 

அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காய்கறிகள் மற்றும் பழங்கள் பொதுமக்களுக்கு வினியோகம் செய்வதற்கு நடமாடும் வாகனங்களை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்ணன் மற்றும் செந்தில்முருகன் ஆகியோர் துவங்கி வைத்தார்கள்

Tags:    

Similar News