உளுந்தூர்பேட்டை ஒன்றியக் குழுத் தலைவராக திமுகவின் ராஜவேல் தேர்வு
உளுந்தூர்பேட்டை ஒன்றியக் குழுத் தலைவராக திமுகவின் ராஜவேல் தேர்வு செய்யப்பட்டார்.;
ராஜவேல்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்த ஊராக உள்ளாட்சி தேர்தலில் உளுந்தூர்பேட்டை ஒன்றிய 21 வார்டு ஊராட்சிக்குழு உறுப்பினர்களாக திமுக- 15, அதிமுக-1, மற்றவை 5 இடங்களில் வெற்றி பெற்றனர். இவர்கள் அனைவரும் கடந்த 20ம் தேதி பதவியேற்றுக்கொண்டனர்.
இந்நிலையில், உளுந்தூர்பேட்டை ஒன்றியக் குழு தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் தேர்தல் அலுவலர் தலைமையில் இன்று நடைபெற்றது.
இதில் 2வது வார்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுகவை சேர்ந்த ராஜவேல் ஒன்றியக்குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு திமுகவினர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.