உளுந்தூர்பேட்டை அருகே தனியார் கல்லூரி-பள்ளி புரிந்துணர்வு ஒப்பந்தம்
உளுந்தூர்பேட்டை அருகே தனியார் கல்லூரி-பள்ளி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.;
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் கமலா கல்வியியல் கல்லூரியில் புனித ஜான் மேல்நிலைப்பள்ளியோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி நடந்தது.
திருநாவலூர் கமலா கல்வியல் கல்லூரி பல கிராமங்களை தத்தெடுத்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்கின்றது.
தற்போது தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் பெயரில் புனித ஜான் மேல்நிலை பள்ளியோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
புனித ஜான் மேல்நிலை பள்ளி தாளாளர் ஜான்பீட்டர் மரக்கன்றுகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகம் பதிவாளர் சவுந்தர்ராஜன், கல்லூரி செயலாளர் டாக்டர் பிரபாகர் ஜெயராஜ், தாளாளர் ஜோசப் முதல்வர் ஏஞ்சல் ஜாஸ்மின் ஷெர்லி, மக்கள் தொடர்பு அலுவலர் சுகிர்தராஜன் பங்கேற்றனர்.