சேலம் மெயின் ரோடு ஏரியில் கொட்டப்பட்ட கோழி கழிவுகளை அகற்ற மக்கள் கோரிக்கை
சேலம் மெயின் ரோடு ஏரியில் கொட்டப்பட்ட கோழி கழிவுகளை அகற்ற மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை சேலம் மெயின் ரோட்டில் உள்ள ஏரியில் கோழிக்கறி கடை இறைச்சி கழிவுகள் டன் கணக்கில் வந்து கொட்டப்படுகிறது.
இதனால் ஏரியில் கடும் துர்நாற்றம் வீசி வரும் நிலையில் உடனடியாக இயற்கை தந்த கொடையான மழைநீரை காப்பதற்காக அரசு அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.