மருத்துவர் இல்லாத அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

உளுந்தூர்பேட்டை அடுத்த களமருதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர், செவிலியர் இல்லாமல் முதலுதவி கிடைக்காத அவலநிலை.;

Update: 2021-09-26 10:30 GMT

களமருதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த களமருதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் செவிலியர் இல்லாமல் முதலுதவிக்கு வரும் ஒவ்வொரு நோயாளிகளையும் அலைக்கழிக்கும் அவலநிலை.

களமருதூர் அருகே உள்ளநன்னாரம் கிராமத்தில் இரவு 2 மணி அளவில்  முதியவர் ஒருவருக்கு தேள் கொட்டியது.  அவரை உடனடியாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் களமருதூர் அழைத்து சென்றனர். ஆனால், அங்கு டாக்டர் செவிலியர் யாரும் இல்லை எனவும் அவருக்கு டிடி ஊசி போட முடியாது எனவும் அங்கிருந்த பணியாளர் கூறியுள்ளார்.

மேலும், தொடர்ந்து மூன்று நாட்களாக இரவு நேரங்களில் பணிக்கு டாக்டர் செவிலியர் இல்லையெனவும் அவர் கூறினார். இதனை அடுத்து வாக்கு வாதத்திற்கு பிறகு ஒரு மணி நேரம் கழித்து கைபேசி மூலம் செவிலியரை அழைத்து வரவைத்து அந்த முதியவருக்கு முறையான முதல் உதவி செய்யப்பட்டது.

அவசர முதலுதவி தேவைப்படும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியில் மருத்துவரோ செவிலியரோ இல்லாதது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

Similar News