பில்லூர் ஊராட்சியில் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு வழங்கிய எம்எல்ஏ
உளுந்தூர்பேட்டை அருகே பில்லூர் ஊராட்சியில் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசை எம்எல்ஏ வழங்கினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே பில்லூர் ஊராட்சியில் பொங்கல் பரிசு வழங்கும் விழா நடந்தது.
விழாவிற்கு பில்லூர் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணகி ஜெயராமன் முன்னிலையில் மற்றும் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜே.மணிகண்ணன் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் பிரசன்னா ஜெயராமன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.