சட்டவிரோதமாக மண் கடத்திய ஜேசிபி மற்றும் டிராக்டர் பறிமுதல்
உளுந்தூர்பேட்டையில் ஏரியில் மண் அள்ளிய ஜேசிபி, டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எலவனாசூர் கோட்டையில் ஏரியில் மண் அள்ளப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில், சப் இன்ஸ்பெக்டர் மாணிக்கம் தலைமையில் போலீசார் அதிரடியாக அங்கு விரைந்தனர்.
அப்போது, கிராமத்தின் ஏரியில் சட்டவிரோதமாக மண் அள்ளிய ஒரு ஜேசிபி மற்றும் ஒரு டிராக்டர் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து தப்பியோடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.