உளுந்தூர்பேட்டை ரோட்டரி சங்க மருத்துவ முகாம் நிறைவு விழா

உளுந்தூர்பேட்டை ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற இலவச மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாம் நிறைவு விழா இன்று நடைபெற்றது;

Update: 2021-09-08 12:43 GMT

உளுந்தூர்பேட்டை ரோட்டரி சங்க மருத்துவ முகாம் நிறைவு விழா

ரோட்டரி மாவட்ட அளவில் உளுந்தூர்பேட்டை ரோட்டரி சங்கத்தின் சார்பில் ஸ்ரீ மகாலஷ்மி மருத்துவமனையில் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்ற  இலவச மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாம் நிறைவு விழா இன்று நடைபெற்றது.  

இந்த முகாமில் இதுவரை 147 பேருக்கு இலவச மருத்துவ பரிசோதனை செய்ததில் 7 பேருக்கு மார்பகப் புற்று நோய் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முகாம் நிறைவு விழா நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர்  இரமேஷ்பாபு தலைமை தாங்கினார், செயலாளர் செந்தில்குமரன் இறைவணக்கம் வாசித்தார், மருத்துவர் எழிலரசி கார்த்திகேயன் வரவேற்றார் , மாவட்ட தலைவர்கள் வின்சென்ட், அன்பழகன் , திலீப் , சாசன தலைவர் வசந்தகுமார், சிறப்பு திட்ட தலைவர் டாக்டர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு திட்டங்களின் மாவட்ட சேர்மன் ரேவதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு திட்டங்களின் தலைவர்கள் தெய்வீகன், மோகன்ராஜ், வெங்கடாஜலபதி, முத்துக்குமாரசாமி உள்ளிட்ட ரோட்டரி நிர்வாகிகள் மற்றும் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News