மகளிர் சுய உதவி குழு கட்டிடம்: சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்
உளுந்தூர்பேட்டை அருகே மகளிர் சுய உதவி குழு கட்டிடத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் அடிக்கல் நாட்டினார்;
உளுந்தூர்பேட்டை தொகுதிக்குட்பட்ட செங்குறிச்சி கிராமத்தில் ரூபாய் 79 லட்சம் மதிப்பீட்டில் மகளிர் சுய உதவி குழு கட்டிடம் கட்டப்படவுள்ளது.
உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜே. மணிகண்ணன் இன்று அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் திருநாவலூர் மற்றும் செங்குறிச்சி கிராம மகளிர் சுயஉதவி குழுவினர் கலந்து கொண்டனர்.