உளுந்தூர்பேட்டை அருகே கிணற்றில் பெண் சடலம் மீட்பு: போலீசார் விசாரணை
உளுந்தூர்பேட்டை அருகே கிணற்றில் அடையாளம் தெரியாத பெண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட இருந்தை கிராமத்தில் கிணற்றில் அடையாளம் தெரியாத பெண் சடலம் ஒன்று மிதப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
தகவலின்பேரில் அங்கு விரைந்த போலீசார், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து பெண்ணின் உடலை மீட்ட போலீசார் கொலையா அல்லது தற்கொலையா? என விசாரணை செய்து வருகிறார்கள்.