மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டன கூட்டம்

உளுந்தூர்பேட்டை அருகே களமருதூரில் மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டன கூட்டம் நடத்தியது;

Update: 2021-08-26 06:19 GMT

களமருதூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கண்டன கூட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உளுந்தூர்பேட்டை குழு, மக்கள் பாராளுமன்ற என்ற பரப்புரை களமருதூர் கடைதெருவில் நடைபெற்றது

இதில் டெல்லி விவசாயிகள் போராட்டம், பெட்ரோல் டீசல் விலை உயர்வு, பெகாசல் மூலம் ஒட்டு கேட்பு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகைகள், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்தது  போன்ற பல்வேறு மக்கள் விரோத போக்கை கண்டித்து வட்டார செயலாளர் வேலு உரையாற்றினார்.

பரப்புரையில் மாவட்ட செயலாளர் அப்பாவு, மாவட்ட நிர்வாகிகள் எம். கலியபெருமாள் கே .ராமசாமி ,ஆ. வளர்மதி  மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News