பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய கள்ளக்குறிச்சி எஸ்.பி.,
அரசுப் பேருந்து தகராறில் பள்ளி மாணவர்களுக்கு கள்ளக்குறிச்சி எஸ்.பி., அறிவுரை வழங்கினார்.;
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் முதல் மணலூர்பேட்டை வரை செல்லும் அரசு பேருந்துகள் மணலூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்து.
அப்போது பிள்ளையார் பாளையம் அருகே மாணவர்களுக்கும் நடத்துநருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதில் 6 மாணவர்கள் சேர்ந்து பேருந்தின் லைட் மற்றும் சீட்டுகளை சேதப்படுத்தினர்.
இதுகுறித்து தகவலறிந்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் விசாரணை மேற்கொண்டார். அப்போது குற்றச் செயலில் ஈடுபட்ட அனைவரும் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தால் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதால் அவர்களை எச்சரித்து பெற்றோர்களை அழைத்து அறிவுரை வழங்கவும் உத்தரவிட்டார்.
நமது காவல் கண்காணிப்பாளர் சொரையப்பட்டு கிராமத்திற்கு நேரில் சென்று அங்கே படிக்கும் மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் நேரில் அழைத்து மாணவர்கள் அறியாமல் செய்த குற்றத்தினால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்று எடுத்துரைத்தார்.
பின்பு மாணவர்களுக்கு ஒழுக்கத்தின் அவசியம் குறித்தும் கல்வியின் அவசியம் குறித்தும் அறிவுரை வழங்கினார்.
பின்பு மாணவர்களின் எதிர்கால நலன் கருதி வழக்கு ஏதும் பதியாமலும் அந்த அரசு பேருந்தின் சேத செலவு தொகை 1200 ரூபாய் தனது சொந்தப் பணத்திலிருந்து எடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியர் ஏழுமலை வாங்கினார். காவல்துறையின் இந்த மனித நேயத்தை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.