உளுந்தூர்பேட்டையில் வெறிச்சோடி காணப்பட்ட முக்கிய சாலைகள்
காவல்துறையினர் முக்கிய சாலைகளில் வலம் வந்தவாறு தேவையின்றி சுற்றிவரும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்
ஓமைக்ரான் நோய் தொற்று பரவுதலை தடுக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசால் இன்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதை கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில், கூடுதல் கண்காணிப்பாளர்கள், துணை கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என சுமார் 300 பேர் முழு ஊரடங்கு கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
காவல்துறையினர் முக்கிய சாலைகளில் வலம் வந்தவாறு தேவையின்றி சுற்றிவரும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து நோய் தொற்று விழிப்புணர்வு அவசியத்தை வலியுறுத்தினர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை கொரோனா ஊரடங்கு காரணமாக,பேருந்து நிலையம் மற்றும் முக்கியமான பகுதியில் உள்ளிட்ட சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.