கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் சிசிடிவி கேமரா பொருத்த முடிவு
உளுந்தூர்பேட்டை உட் கோட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடை முன்பு ஒரு வாரத்திற்குள் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை
போதைக்கும் குற்றவாளிகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதால், உளுந்தூர்பேட்டை உட் கோட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடை முன்பும் கேமரா பொருத்த மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்கவும், குற்றங்கள் நடக்காமல் தடுக்கவும் முடியும் என உளுந்தூர்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளர் கூறியுள்ளார்