அக்காவை கொலை செய்த தம்பி: போலீசில் சரண்
உளுந்தூர்பேட்டை அருகே அக்காவுடன் ஏற்பட்ட வாய்த்தகராறில் அடித்து கொலை செய்த தம்பி காவல்நிலையத்தில் சரணடைந்தார்;
உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட கோட்டையாம் பாளையம் கிராமத்தை சேர்ந்த முனுசாமி மகன் உதயகுமார். இவருக்கும் இவரது அக்கா ராஜலட்சுமிக்கும் ஏற்பட்ட வாய் தகராறில், அக்காவை கழுத்தை நெரித்து கொன்று விட்டார்.
பின்னர் உதயகுமார் தனது அக்காவை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டதாக கூறி உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் சரணடைந்தார்.