சமூகவலைதளங்களில் வைரலாகும் சிறுவனின் ராப் பாடல்: வாழ்த்து தெரிவித்த எம்எல்ஏ

சமூகவலைதளங்களில் ராப் பாடல் மூலம் வைரலாகி வரும் 10 வயது சிறுவன் எம்எல்ஏ.,விடம் பாடி வாழ்த்து பெற்றார்.

Update: 2022-01-22 16:48 GMT

தான் பாடிய ராப் பாடல்களை பாடி உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ., ஏ.ஜே.மணிகண்ணனிடம் வாழ்த்து பெற்ற சிறுவன் அகிலேஷ்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சி கிராமத்தை சேர்ந்வர் 10 வயது சிறுவன் அகிலேஷ். இவர் பாடிய ராப் பாடல்கள் இந்தியா முழுவதும் சமூக வலைத்தளங்களில் தற்போது பிரபலமாகி வருகிறது.

இதனால் இவரை பராட்டியும், வாழ்த்தியும் தற்போது கமெண்டுகள் மற்றும் லைக்குகள் குவிந்து வருகிறது. 

இதனைத்தொடர்ந்து இன்று உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜே.மணிகண்ணனை சந்தித்த சிறுவன் அகிலேஷ், தான் பாடிய ராப் பாடல்களை பாடி அவரிடம் வாழ்த்து பெற்றார்.

Tags:    

Similar News