திருநாவலூர் ஒன்றிய ஊராட்சி தலைவர் கூட்டமைப்பு சங்கத்தின் பொறுப்பாளர்கள் நியமனம்

திருநாவலூர் ஒன்றிய ஊராட்சி தலைவர் கூட்டமைப்பு சங்கத்தின் பொறுப்பாளர்கள் நியமனம் செய்வதற்கான கூட்டம் நடைபெற்றது.;

Update: 2022-03-08 15:20 GMT

திருநாவலூர் ஒன்றிய ஊராட்சி தலைவர் கூட்டமைப்பு சங்கத்தின் பொறுப்பாளர்கள் நியமனம் செய்வதற்கான கூட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூர் ஒன்றியத்தில் 44 கிராம ஊராட்சி ஊராட்சி தலைவர் கூட்டமைப்பின் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகிய பதவிக்கள் தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் திருநாவலூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர்  ஏ.ஜே.மணிகண்ணன் தலைமை தாங்கினார். திருநாவலூர் மேற்கு ஒன்றிய செயலாளர், கே.வி.முருகன் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் தலைவர்களுக்கான கூட்டமைப்பின் தலைவர் பதவி மதியனூர் ஊராட்சி மன்ற தலைவர் தண்டபாணி மற்றும் கூட்டமைப்பின் செயலாளர் பதவிக்கு பெரும்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் மருதபாண்டி பொருளாளர் பதவிக்கு பாதூர் ஊராட்சி மன்ற தலைவர் ராமலிங்கம் ஆகியோர்களை அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்களும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Tags:    

Similar News