தேர்தலையொட்டி பாதுகாப்பு படை அணிவகுப்பு

உளுந்தூர்பேட்டையில் தேர்தலையொட்டி மத்திய தொழிற் பாதுகாப்பு படை மற்றும் போலீசாரின் கொடி அணிவகுப்பு நிகழ்வு நடைபெற்றது.

Update: 2021-03-02 12:44 GMT

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் பொதுமக்களின் அச்சத்தை போக்கும் வகையில் காவல்துறையினர் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சார்பில் நடைபெற்ற கொடி அணிவகுப்பு நிகழ்வு, உளுந்தூர்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் காவல்துறையினர் மற்றும் மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர் என 50க்கும் மேற்பட்டோர் கொடி அணிவகுப்பு நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News