திருப்பதி ஏழுமலையான் கோவில் கட்டும் பணி- முதல்வர் அடிக்கல்

Update: 2021-02-23 03:45 GMT

உளுந்தூர்பேட்டையில் திருப்பதி ஏழுமலையான் கோவில் கட்டுவதற்கான பணியை அடிக்கல் நாட்டி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துவக்கி வைத்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் புதிதாக கட்டப்படவுள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர பெருமாள் கோவில் அடிக்கல் நாட்டு விழா திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு பூமி பூஜைக்கான அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், தொழில் துறை அமைச்சர் சம்பத், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா, திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினரும் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான குமரகுரு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News