சங்கராபுரத்தில் வ.உ. சிதம்பரனார் படத்திறப்பு விழா, புகழஞ்சலி நிகழ்ச்சி
சங்கராபுரத்தில் வ.உ. சிதம்பரனார் படத்திறப்பு விழா மற்றும் புகழஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.;
வ.உ.சிதம்பரனாரின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் தமிழ் படைப்பாளர் சங்கம் சார்பாக செக்கிழுத்த செம்மல் வ. உ.சிதம்பரனார் படத்திறப்பு விழா மற்றும் புகழ் அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து தமிழ் படைப்பாளர்கள் சங்கத்தினர் அவரது படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டர்னர்.