நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: தியாகதுருகத்தில் சின்னம் பொருத்தும் பணி தீவிரம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தியாகதுருகத்தில் சின்னம் பொருத்தும் பணி நடைபெற்றது.

Update: 2022-02-17 04:01 GMT

பைல் படம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் பேரூராட்சி தேர்தலில் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி நேற்று நடந்தது.

தியாகதுருகம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் போட்டியிட 85 பேர் வேட்பு மனு தாக்கல் செய்ததில் 5 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 34 பேர் வாபஸ் பெற்றனர். 13வது வார்டு தி.மு.க., வேட்பாளர் கிருஷ்ணவேணி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மீதமுள்ள 14 வார்டுகளில் 45 பேர் களத்தில் உள்ளனர். மொத்தம் 19 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வார்டு வாரியாக 19 ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நேற்று பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. தேர்தல் நடத்தும் அலுவலர் சீனிவாசன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் செல்வராஜ், பிரபு, மண்டல தேர்தல் அலுவலர்கள் அன்பழகன், சிவக்குமார் முன்னிலையில் பி.எச்.எல்., நிறுவன பொறியாளர்கள் இயந்திரத்தில் சின்னத்தை பொருத்தி வேட்பாளர்களுக்கு செயல் விளக்கம் அளித்தனர்.

பின்னர் இயந்திரங்கள் அனைத்தும் சீலிடப்பட்டு ஓட்டுச்சாவடிக்கு எடுத்து செல்ல தயார் நிலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News