கள்ளக்குறிச்சி அருகே மின்கம்பி அறுந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டது.;
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மூரார் பாளையம் கிராமத்தில், சாலையின் குறுக்கே சென்று கொண்டிருந்த உயர் அழுத்த மின்கம்பி ஒன்று திடீரென அறுந்து சாலையில் விழுந்தது.
இதை பார்த்த அப்பகுதி மக்கள் அந்த வழியாக வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தியதுடன், இதுபற்றி சங்கராபுரம் போலீசார் மற்றும் மின் ஊழியருக்கும் தகவல் தெரிவித்தனர் .
இதையடுத்து, போலீசார் மற்றும் மின் ஊழியர்கள் விரைந்து வந்து அருந்த மின்கம்பியை அப்புறப்படுத்தினர் இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது மின்கம்பி அறுந்து விழும் பொழுது அந்த வழியாக யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.