சங்கராபுரம் அருகே டிராக்டர் - இருசக்கர வாகனம் மோதல்: பெண் படுகாயம்

சங்கராபுரம் அருகே டிராக்டர் - இருசக்கர வாகனம் மோதியதில் பெண் ஒருவர் படுகாயமடைந்தார்.;

Update: 2021-09-21 13:38 GMT

பைல் படம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம் மூரார்பாளையம் அருகே பரமநத்தம் சாலையில் கரும்பு டிராக்டர் இருசக்கர வானம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த பெண் ஒருவருக்கு கால் முறிந்தது.

இதனையடுத்து, காயமடைந்த பெண்ணை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News