வீட்டு வசதி திட்டத்தில் பணம் வழங்காததை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகை

சங்காராபுரத்தில் பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தில் முறையாக பணம் வழங்காததை கண்டித்து இ.கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம்.;

Update: 2021-12-02 16:06 GMT

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற முற்றுகை போராட்டம். 

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் தொகுதிக்குட்பட்ட சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மத்திய அரசின் பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தில் பயனாளிகளுக்கு முறையாக பணம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News