சங்கராபுரம் அருகே வாகன சோதனையில் ரூ.63 ஆயிரம் பறிமுதல்: பறக்கும்படை அதிரடி

சங்கராபுரம் அருகே வாகன சோதனையில் ஆவணங்களை கொண்டுவரப்பட்ட ரூ.63 ஆயிரம் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.;

Update: 2021-10-03 10:30 GMT

பைல் படம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே வாகன சோதனையில் ஆவணங்களை கொண்டுவரப்பட்ட அறுபத்தி மூன்று ஆயிரம் ரூபாய் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சங்கராபுரம் அடுத்த எஸ்.கொளத்தூர் பிரிவு சாலையில் பறக்கும் படை தனி தாசில்தார் சத்யநாராயண சப் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் வாகன சோதனையில் அறுபத்தி மூன்று ஆயிரம் கொண்டு வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து காரில் வந்த திருப்பத்தூரை சேர்ந்த தமிழரசு என்பவரிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்து சங்கராபுரம் தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜேந்திரனிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News