சங்கராபுரம் அருகே துணை சுகாதார நிலைய மேற்கூரை இடிந்து விழும் நிலையில் உள்ளது
சங்கராபுரம் வட்டம் இராவத்தநல்லூர் கிராமத்தில் உள்ள துணை சுகாதார நிலையத்தில் மேற்கூரை இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது;
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் இராவத்தநல்லூர் கிராமத்தில் துணை சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டடத்தில் உள்ள மேற்கூரைகள் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.
மேலும் மின் சாதனம் போன்ற அடிப்படை வசதிகள் இன்றியும் காணப்படுகிறது. அரசு அதிகாரிகள் உடனடியாக இதனை சரிசெய்து தர ஊர் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.