சங்கராபுரத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி சுவரொட்டிகள் அகற்றம்
சங்கராபுரத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் அகற்றப்பட்டன.;
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பேரூராட்சிக்கு வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதியன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.
இதனையொட்டி சங்கராபுரம் பேருந்து நிலையம் மற்றும் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள், விளம்பரங்கள், போஸ்டர்கள், ஆகியவற்றை அகற்றும் பணியில் பேரூராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.