முக கவசம் அணியாத 50 பேருக்கு அபராதம்.
சங்கராபுரத்தில் முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்தனர்;
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் மற்றும் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்,
அப்போது மோட்டார் சைக்கிளில் முக கவசம் அணியாமல் வந்த 50 பேருக்கு ரூ.50 அபராதம் விதித்தனர். பின்னர் வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அறிவுரை கூறி முககவசம் வழங்கினர்.