மா.கம்யூனிஸ்ட் கட்சியினர் வட்ட வழங்கல் அதிகாரியிடம் கோரிக்கை மனு
சங்கராபுரம் மா.கம்யூனிஸ்ட் கட்சியினர் வட்ட வழங்கல் அதிகாரியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.;
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், அரசம்பட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சங்கராபுரம் வட்ட வழங்கல் அலுவலரிடம் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், அரசு நியாயவிலைக் கடைகள் வழங்கக் கூடிய உணவு பொருட்கள் மக்களுக்கு சரிவர வழங்கப்படவில்லை. பாமாயில் எண்ணெய் வழங்கும் முறை ஊர் பகுதிக்கு ஒரு மாதமும் மற்ற பகுதிக்கு ஒரு மாதமும் வழங்கப்படுகிறது.
இந்த முறையை மாற்றி அனைத்து தர மக்களும் பொதுவாக வழங்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.