கள்ளக்குறிச்சி அருகே தேர்தல் ஆணையத்தை கண்டித்து மக்கள் புறக்கணிப்பு போராட்டம்

கள்ளக்குறிச்சி அருகே தேர்தல் ஆணையத்தை கண்டித்து மக்கள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-09-24 10:21 GMT

சாலை மறியலில் ஈடுபட்ட பரமநத்தம் கிராம மக்கள்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம், ரோடுபரமநத்தம், பரமநத்தம் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் ஒரு தலைபட்சமாக செயல்படும் தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தை கண்டித்து பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், சாதி ரீதியாக தலைவர் வேட்பாளரை நியமனம் செய்த சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியனை கண்டித்து அவர்கள் கோசமிட்டு பதாகைகள் வைத்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News