சங்கராபுரத்தில் ஊட்டச்சத்து மிக்க பாரம்பரிய உணவு விழிப்புணர்வு நிகழ்ச்சி
சங்கராபுரத்தில் ஊட்டச்சத்து மிக்க பாரம்பரிய உணவு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.;
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் ஊட்டச்சத்து மிக்க பாரம்பரிய உணவு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் வட்டார அளவிலான ஊட்டச்சத்து மிக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சங்கராபுரம் வட்டத்திற்கு உட்பட்ட 30க்கும் மேற்பட்ட கிராமத்திலிருந்து மகளிர் குழு சார்பில் ஊட்டச்சத்து மிக்க இயற்கை உணவுகள் தயார் செய்து பார்வைக்காக வைத்தனர்.
இதை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் மற்றும் வட்டார மகளிர் மேம்பாட்டு இயக்கம் மேலாளர் தீபா,குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பாரம்பரியமிக்க ஊட்டச் சத்தான உணவுகள் தயார் செய்து 3 மகளிர் குழுவினருக்கு பரிசுகள் வழங்கினார்கள் சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்வில் வட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் இதில் கலந்து கொண்ட அனைத்து மகளிர் குழுக்களுக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.