சங்கராபுரம் திமுக வேட்பாளரை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்
சங்கராபுரம் திமுக வேட்பாளர் உதயசூரியனை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.;
சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடந்த பிரசார கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் உதயசூரியனை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது. சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தா.உதயசூரியனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும், அனைவரும் அயராது உழைக்க வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.