கள்ளக்குறிச்சி கல்வராயன் மலையில் 1200 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
கல்வராயன் மலை பகுதியில் சட்ட விரோதமாக காய்ச்சப்பட்ட 1200 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் அவர்கள் கல்வராயன் மலையில் இன்று கச்சராபாளையம் காவல் ஆய்வாளர் ஸ்ரீபிரியா தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் ரவி மற்றும் காவலர்கள் கல்வராயன்மலை பகுதியில் மதுவிலக்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சின்னதிருப்பதி கிழக்கு ஓடையில் பெருமாள் என்பவர் ஆறு பேரல்களில் 1200 லிட்டர் சாராய ஊறல் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இதனை தொடர்ந்து 1200 லிட்டர் சாராய ஊறலை அதே இடத்தில் கொட்டி அழித்தனர் இது தொடர்பாக தலைமறைவாக உள்ள ஒருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்