கல்வராயன் மலையில் 1000 லிட்டர் சாராய ஊறல்கள் அழிப்பு; போலீசார் அதிரடி

கல்வராயன் மலையில் 1000 லிட்டர் சாராய ஊறல்களை போலீசார் கண்டுபிடித்து அழித்தனர்.

Update: 2021-08-26 17:50 GMT

ஓடையில் கண்டுபிடிக்கப்பட்ட சாராய ஊறல் பேரல்கள்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் உத்தரவுபடி, கள்ளக்குறிச்சி மதுவிலக்கு துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு கல்வராயன் மலை முழுவதும் அதிகாலை முதல் மதுவிலக்கு சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த சோதனையில், கொடமாத்தி மற்றும் நாராயணப்பட்டி ஆகிய கிராம ஓடையில் புளித்த சாராய ஊறல்கள் 5 பேரல்களில் தலா 200 லிட்டர் வீதம் 1000 லிட்டர் ஊரல்கள் கண்டுபிடிக்கப்பட்டது. 

இதனையடுத்து, கள்ளச்சாராய ஊறல்கள் அனைத்தையும் போலீசார் சம்பவ இடத்திலேயே  கொட்டி அழித்தனர்.

Tags:    

Similar News