சங்கராபுரம் அருகே இறந்து கிடந்த மயில்கள்: வனத்துறையினர் விசாரணை

சங்கராபுரம் அருகே மர்மமான முறையில் மயில்கள் இறந்து கிடந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;

Update: 2022-01-19 03:22 GMT

இறந்து கிடக்கும் மயில்கள்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம் மல்லாபுரம் எல்லையில் உள்ள பாப்பாங்கால் ஓடையில் தேசிய பறவையான ஆண் மயில் இரண்டும், பெண்மையில் 9 என 11 மயில்கள் இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் இறந்த மயில்களை மீட்டு பிரேத பரிசோதனை செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News