கல்வராயன் மலைப்பகுதியில் 1000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
கல்வராயன்மலையில் உள்ள அரண்மனை புதூர் கிராமத்தில் 1000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு;
கல்வராயன்மலையில் உள்ள அரண்மனை புதூர் கிராமத்தில் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்குள்ள ஓடை அருகே சாராயம் காய்ச்சுவதற்காக பதுக்கி வைத்திருந்த 1000 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் அதனை கீழே கொட்டி அழித்தனர். இது தொடர்பாக அதே கிராமத்தை சேர்ந்த குபேந்திரன் மீது கரியாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.