Kallakurichi news today: கள்ளக்குறிச்சி அரசு போக்குவரத்து பணிமனையில் ரூ.9 லட்சம் டிக்கெட்டுகள் திருட்டு
Kallakurichi news today: கள்ளக்குறிச்சி அரசுப் பேருந்து பணிமனையில் ரூ.9 லட்சம் மதிப்பிலான டிக்கெட்டுகள் திருடுபோனது குறித்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
Kallakurichi news today: கள்ளக்குறிச்சி அரசுப் பேருந்து பணிமனையில் ரூ.9 லட்சம் மதிப்பிலான டிக்கெட்டுகள் திருடுபோனது குறித்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் சில மாதங்களுக்கு முன் தணிக்கை நடைபெற்றது. அப்போது டிக்கெட்டுகள் திருடப்பட்டுள்ளது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, திருடு போன டிக்கெட்டுகளின் வரிசை எண்களை கண்டறிந்து போக்குவரத்து துறை உயர் அலுவலர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது.
கடந்த அக்டோபர் 7ம் தேதி, விழுப்புரத்தில் டிஎன் 32 என் 4252 என்ற பதிவெண் கொண்ட அரசு பஸ்சில் பயணித்த பயணியரிடம் பரிசோதகர்கள் டிக்கெட் சோதனை செய்தனர்.
அதில், அந்த பஸ்சில் கண்டக்டராக பணியில் இருந்த தமிழரசன், திருடு போனதாக கணக்கெடுக்கப்பட்ட டிக்கெட்டுகளை பயணியருக்கு வழங்கியது தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்த கள்ளக்குறிச்சி பணிமனை மேலாளர் முருகன், கண்டக்டர் தமிழரசனிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் கண்டக்டர் தமிழரசன், ஒரு வார காலத்தில் டிக்கெட்டுகளுக்கான பணத்தை செலுத்தி விடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
திருடு போன மொத்த டிக்கெட்டுகளையும் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில், அதில், ரூ.9 லட்சத்து 2 ஆயிரத்து 520 மதிப்பிலான பல்வேறு விலை கொண்ட டிக்கெட்டுகள் திருடுபோனது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக, முருகன் அளித்த புகாரில், கண்டக்டர் தமிழரசன் மீது கள்ளக்குறிச்சி போலீசார், நேற்று முன்தினம் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.